Anand

  •  ·  Administrator
  • 17 views
Friends
Empty
Relationships
Empty

மக்கள் அக்கறையைப் புரிந்துகொண்டு களப்பணி செய்தல்

Field work with understand people concern

·
Added a post

வன்மையாக கண்டிக்கிறேன் நடிகர்ளை.

சினிமாவில் நடிகர்கள் பொறுப்பற்ற வகையில் நடிப்பது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுகிறது படுகொலைகள், ரவுடிகளின் தொந்தரவுகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்ற குற்றங்கள் அதிகரிப்பதற்கும் காரணம், இது தொடர்பாக சில முக்கிய காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

* வன்முறை மற்றும் ரவுடியிசம்: திரைப்படங்களில் வன்முறை மற்றும் ரவுடியிசம் போன்ற காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டு காட்டப்படுகின்றன. இது இளைஞர்கள் மனதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் வன்முறையை ஒரு வீர செயலாகவும், ரவுடியிசத்தை ஒரு சக்தி வாய்ந்த செயலாகவும் கருதும் நிலை உருவாகிறது.

* பெண்களை தவறாக சித்தரிப்பது: சில திரைப்படங்களில் பெண்கள் தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் வெறும் கவர்ச்சிப் பொருளாகவும், ஆண்களின் இச்சைகளுக்கு அடிபணிபவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். இது பெண்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை இளைஞர்கள் மனதில் உருவாக்குகிறது.

* சட்டத்தை மதிக்காதது: சில திரைப்படங்களில் சட்டத்தை மதிக்காத கதாபாத்திரங்கள் ஹீரோக்களாக காட்டப்படுகிறார்கள். இது இளைஞர்கள் மனதில் சட்டத்தை மதிக்காத போக்கை ஊக்குவிக்கிறது.

* பணத்தை தவறான வழியில் சம்பாதிப்பது: சில திரைப்படங்களில் பணத்தை தவறான வழியில் சம்பாதிப்பது எளிது என்று காட்டப்படுகிறது. இது இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணங்களை வளர்க்கிறது.

* நடிகர்களின் பொறுப்பற்ற பேச்சுக்கள்: திரைப்படங்களில் நடிகர்கள் பேசும் சில வசனங்கள் சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, வன்முறையை தூண்டும் வசனங்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வசனங்கள் இளைஞர்கள் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கின்றன.

* "சினிமா என்பது ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். அது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, திரைப்படங்களில் வன்முறை மற்றும் ரவுடியிசம் போன்ற காட்சிகளை குறைப்பது அவசியம்."

* "திரைப்படங்களில் பெண்களை மரியாதையுடன் சித்தரிக்க வேண்டும். அவர்களை வெறும் கவர்ச்சிப் பொருளாக காட்டுவதை தவிர்க்க வேண்டும்."

* "சட்டத்தை மதிக்காத மற்றும் பணத்தை தவறான வழியில் சம்பாதிக்கும் கதாபாத்திரங்களை ஹீரோக்களாக காட்டுவதை தவிர்க்க வேண்டும்."

* "நடிகர்கள் சமூக பொறுப்புடன் பேச வேண்டும். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்."

எனவே, திரைப்படங்களில் நடிகர்கள் பொறுப்புடன் நடிப்பது சமூகத்தில் குற்றங்கள் குறைவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமையும்.

ச.ஜெயகுமார்

மாநில தலைவர்

மறுமலர்ச்சி ஜனதா கட்சி

9751934216

·
Added an event

🌟 தமிழ்நாட்டின் எதிர்கால தலைவர்கள் 🌟

🎤 இணையவழி வாதப்போட்டி & பேச்சுப் போட்டி 🎤

🗣️ தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த விரும்புகிறீர்களா?

📢 ஆட்சி, கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்கள் ஆலோசனைகள் எங்களை மாற்றக்கூடியவை!

மறுமலர்ச்சி ஜனதா கட்சி (MJK) மாணவர்களுக்கு இணையவழி வாதப்போட்டி & பேச்சுப் போட்டி நடத்துகிறது! இது உங்கள் குரலை உயர்த்த சிறந்த வாய்ப்பு!

🏆 ஏன் கலந்து கொள்ள வேண்டும்?

✅ ஆட்சி, கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்கள் எண்ணங்களை பகிரலாம்.

✅ மாணவர்களுடன் வாதிப்பதில் சிறந்த அனுபவம் பெறலாம்.

✅ வெற்றி பெறும் மாணவர்கள் MJK இன் இளையரச தூதர்களாக தெரிவு செய்யப்படுவார்கள்!

✅ உங்கள் கருத்துகள் எதிர்கால கொள்கைகளில் இடம் பெறும்!

✨ தமிழகத்தின் மாற்றத்திற்கு உங்கள் குரல் முக்கியம்!

எப்படி பங்கேற்பது : நிகழ்வில் சேர்ந்த பிறகு, 'Discussion' என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பதில்களைப் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் உரையாகவோ அல்லது பதிவுசெய்யப்பட்ட வீடியோவாகவோ வழங்கலாம்.

உங்கள் யோசனைகள் நம்மை முன்னேற்ற வழியில் கொண்டு செல்லும்! 🚀

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள: [email protected] or join our WhatsApp group https://chat.whatsapp.com/D7l3wcU5gtW3X8EMFdfZc9

ிழ்நாடு_எதிர்கால_தலைவர்கள் #வாதப்போட்டி ைய_சக்தி 🚀

·
Added a discussion

1) இளைஞர்களை முன்னிறுத்தி புதியதோர் அரசியல் செய்வோம்!

2) புதிய அரசியல் பாதையில், சுயநலமற்ற, நேர்மையான, சமூக சிந்தனையோடு என்றும் மக்கள் சேவையில் ஈடுபடுவோம்!

3) நாட்டில் சாதி மத பாகுபாடின்றி, நாட்டு மக்கள் ஒற்றுமையாய் வாழ வழிவகை செய்வோம்! 

4) சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து தமிழனாய் ஒன்றிணைவோம்! தமிழருக்கான ஆட்சியை வென்றெடுப்போம்!!

5) பொருளாதார ஏற்ற தாழ்வு இல்லாத சமுதாயம் அமைய பாடுபடுவோம்.

6) சாமானிய மக்களும் பயன் பெரும் வகையில் தரமான மருத்துவம் மற்றும் கல்வியை இலவசமயமாக்குவோம்.

7) பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றத்தை உறுதிபடுத்துவோம்.

8) ஆண்களுக்கும் நிகராக பெண்களும் அரசியல் களம் காண வேண்டும். அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான முக்கியத்துவத்தை அவர்களுக்கு அளிப்போம்.

9) மாநிலங்கள் அனைத்திற்கும் சுய ஆட்சி தன்னாட்சி ஆதிகாரம் கிடைக்க பாடுபடுவோம். ஆதற்கான சட்ட திருத்தம் கொண்டுவர பாடுபடுவோம்.

10) தமிழ் மொழியை எங்கும் வாழவைப்போம்! தமிழனை எங்கும் ஆளவைப்போம்!!

11) இயற்கைக்கு முறனற்ற கண்டுபிடுப்புகளை ஊக்குவிப்போம்.

12) உலக தமிழர்களை சாதி மத பாகுபாடு இன்றி ஒன்றிணைத்து தமிழர் உரிமைகள் கிடைத்திட தமிழர் உரிமைகளை போராடி வென்றிட என்றும் பாடுபடுவோம்.

13) ஏழை சாமானிய அரசை உருவாக்குவோம்.

14) அவரவர் தாய்மொழி கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

15) தமிழை ஆட்சி மொழியாக, தமிழை கற்கும் மொழியாக, தமிழை பேசும் மொழியாக, தமிழை பண்பாட்டு மொழியாக, தமிழை வழிபாட்டு மொழியாக, தமிழை வழக்காடு மொழியாக, மாற்றிடுவோம்.

16) தாய்மொழியில் கல்வி கற்றோருக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிப்போம்.

17) அரசு வேலை வாய்ப்பில் அந்த அந்த மாநில மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

18) மறுமலர்ச்சி ஜனதா கட்சி எந்த ஒரு மத சமய நம்பிகையிலும் தலையிடாது. எந்த ஒரு சமயத்தையும் ஏற்ற தாழ்வுடன் கருதாது. ஜாதி மதங்களை கடந்து தமிழனாய் ஒன்றிணைய முயற்சிப்போம்.

19) இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துவோம். அழிந்து வரும் பயிரினங்களை கண்டெடுத்து பாதுகாப்போம்.

20) நீர் நிலைகளை பாதுகாப்போம். நதி நீர் இணைப்பை உறுதிபடுத்துவோம்.தடுப்பணைகளை அதிக்கப்படுத்துவோம்.அனைவர்க்கும் தூய்மையான குடிநீர் வழங்க முயற்சிப்போம் .குடிநீர் வாணிகமையமாவதை தடுப்போம்.

21) இயற்கை வளங்களை பாதுகாப்போம். காடுகள் ஆழிக்கப்படுவதை தடுப்போம் .வன விலங்கு பாதுகாப்பை உறுதிசெய்வோம்.

22) வனங்கள் மற்றும் விவசாய நிலங்களை பாதுகாப்போம்.

23) தொழிலாளர்கள் முன்னேற்றம் மற்றும் நாட்டின் தொழில் வளர்ச்சியை உறுதிப்படுத்துவோம்.

24) ஊழலற்ற ஆட்சி நிர்வாகம் அமைப்போம்.

25) ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு சுய உதவி குழுக்கள் அமைத்து அவர்களின் அடிப்படை தேவைகள், வேலைவாய்ப்பு, செய்முறை தொழிற் பயிற்சி மற்றும் அவர்கள் ஒற்றுமையை உறுதி செய்வோம்.

26) பாரம்பரிய இந்திய மற்றும் தமிழ்நாட்டின் கலாசாரங்களை பேணி காப்போம். கலை, இலக்கியம், காவியம், நடனம், ஓவியம், சிற்பக்கலை ஆகியவற்றை பாதுகாப்பதோடு அவற்றின் முன்னேற்றத்தையும் உறுதிசெய்வோம்.

27) பாரம்பரிய தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம், களரி, ஜல்லிக்கட்டு போன்ற வீர விளைட்டுகள் பற்றி வளரும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்வோம்.

28) தமிழர் பண்பாடு மற்றும் சுற்றுலா துறையை மேம்படுத்த படித்த இளைஞர்கள் மற்றும் உலக தமிழர்களை ஒன்றிணைத்து துறையை விரிவுபடுத்துவோம்.

29) கிராமப்புற நடனம், கிராமிய இசை ஆகியவற்றையும் அதை சார்ந்த தொழிலார்கள் பாதுகாப்பையும் உறுதி செய்வோம்.

30) மீனவர்களின் நலன், அவர்களின் பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பு, பட்டு வளர்ப்பு, இயற்கை விவசாயம் ஆகியவற்றில் பாதுகாப்பான புதிய தொழில்நுட்பத்தை புகுத்த ஏற்பாடு செய்வோம்.

31) புவிசார் கடல் சார் ஆராய்ச்சிகளை மேம்படுத்துவோம். வளர்ந்துவரும் இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்துவோம்.

32) வாக்களிக்க மக்களுக்கு உரிமை உள்ளதுபோல் வாக்கை திரும்ப பெரும் ஆதிகாரம் மக்களுக்கு வழங்க அதிகாரம் கொண்டுவரப்படும். அதற்கான சட்ட திருத்தும் கொண்டுவருவோம்.

33) பிரதமர், ஜனாதிபதி, முதல்வர் தேர்வு செய்யும் முறையை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் சட்ட திருத்தம் கொண்டுவருவோம்.

34) மக்களால் தேர்ந்துதெடுக்கப்படாத மேலவை கலைக்கப்படும். மக்களால் தேர்வு செய்யாத நியமனம் உறுப்பினர்கள் தடை சட்டம் கொண்டுவரப்படும்.

35) தனியார் ஓட்டுநர் நல வாரியம் அமைப்போம்.

·
Added a post

மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் சுனிதா வில்லியம்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். விண்வெளியில் இருந்து பத்திரமாக பூமிக்கு வந்தடைந்தது, விஞ்ஞானத்தின் மறுமலர்ச்சி, புதிய மாற்றங்களை கொண்டு வருவது புதிய புதிய கண்டுபிடிப்புகள் மறுமலர்ச்சி ஆகும் சமூகத்திற்கு மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது மறுமலர்ச்சி ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸின் சாதனை, மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவரது பயணம், எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மறுமலர்ச்சி ஜனதா கட்சி, சுனிதா வில்லியம்ஸின் சாதனையை பாராட்டி, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

·
Added an album
Anand Discussions
நமது கொள்கைகள்