Anandkumar

  •  ·  Standard
  • 10 views
Friends
Empty
Relationships
Empty

சேலத்தில் மே 25ஆம் தேதி மறுமலர்ச்சி ஜனதா கட்சி மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து நடத்தும் விவசாயிகள் வாழ்வியல் மீட்பு மற்றும் உரிமைகள் மீட்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயப் பிரதிநிதிகள், சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாய வல்லுநர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்று மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் மாநில நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

இந்த மாநாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் அவர்களின் உரிமைகளை மீட்டெடுப்பது தொடர்பான முக்கிய பிரச்சினைகளை விவாதிக்கும் . மேலும், விவசாயத் துறையில் உள்ள தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் மாநாட்டில் ஆலோசிக்கப்படும். பல்வேறு மாநிலங்களிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்வதால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்துப் விவாதிக்கப்படும்.

திரு.K.S.முருகேஷ்வர் அவர்கள் மாநில செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்

மாநில தலைவர் உயர் திரு ஜெயகுமார் அவர்கள் மற்றும் மாநில பொருளாளர் திரு அரங்கநாதன் அவர்கள் மாநில பொது செயலாளர் ஆனந்த சுப்பிரமணி அவர்கள் முன்னிலையில் தருமபுரி அலுவலகத்தில் பொறுப்பேற்றார்